தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெண்கலம் வென்றார் சோனல்பென் * பாரா டேபிள் டென்னிசில்

வெண்கலம் வென்றார் சோனல்பென் * பாரா டேபிள் டென்னிசில்

வெண்கலம் வென்றார் சோனல்பென் * பாரா டேபிள் டென்னிசில்


ADDED : மே 08, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாஸ்கோ: சர்வதேச பாரா டேபிள் டென்னிசில் இந்தியாவின் சோனல்பென் வெண்கலம் வென்றார்.

சுலோவேனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான, சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் தொடர், லாஸ்கோ நகரில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோனல்பென், தாய்லாந்தின் இடானனை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-3 என கைப்பற்றிய சோனல்பென், அடுத்த செட்டை 7-11 என இழந்தார். மூன்றாவது செட்டை 11-8 என வசப்படுத்தி பதிலடி தந்த சோனல்பென், 4வது செட்டை 9-11 என நழுவவிட்டார்.

ஐந்தாவது, கடைசி செட்டில் போராடிய இவர், 12-14 என கோட்டை விட்டார். முடிவில் சோனல்பென் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பெண்கள் இரட்டையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் விஜய தீபிகா, தென் கொரியாவின் சங்யே ஜோடி, 3-1 என (9-11, 11-4, 11-7, 11-4) என்ற கணக்கில் செர்பிய ஜோடியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us