உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 05, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
பாங்காக்: ஆசிய யூத் டேபிள் டென்னிசில் இந்தியாவின் திவ்யான்ஷி, சின்ட்ரெல்லா ஜோடி வெள்ளி வென்றது.
தாய்லாந்தில் ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 19 வயது பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சின்ட்ரெல்லா ஜோடி, ஜப்பானின் ஆவோபா டகாஷகி, மிசுஜு டகேயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கடந்த 1999ல் பவுலோமி, மவுமா, 2013ல் மணிகா, ரீத் ஜோடிக்குப் பின், இத்தொடரின் பெண்கள் இரட்டையரில் இந்தியா வென்ற மூன்றாவது பதக்கம் ஆனது.
