/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழக தடகள வீரருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை விதிமீறலால்...
/
தமிழக தடகள வீரருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை விதிமீறலால்...
தமிழக தடகள வீரருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை விதிமீறலால்...
தமிழக தடகள வீரருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை விதிமீறலால்...
ADDED : ஏப் 13, 2024 10:48 PM

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனை விதிகளை மீறிய தடகள வீரர் லட்சுமணனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்திய தடகள வீரர் லட்சுமணன் 33. கடந்த 2017ல் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 5000 மீ., ஓட்டம், 10,000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றவர். தவிர ஆசிய உள்ளரங்கு போட்டியில் 3000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (என்.ஏ.டி.ஏ.,) சோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இதன் அடிப்படையில் போட்டி இல்லாத நாட்களில் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2022ல் இருமுறை சோதனையை தவிர்த்தார் லட்சுமணன். 2023 ல் நடந்த சோதனையிலும் பங்கேற்க வில்லை. 12 மாத இடைவெளியில் தொடர்ந்து மூன்று சோதனையை தவிர்த்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''மகள் உடல்நலன், காயத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதால் சோதனையில் பங்கேற்கவில்லை,'' என்றார்.
இதை ஏற்க மறுத்த என்.ஏ.டி.ஏ., லட்சுமண் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 'லட்சுமணனுக்கு போதிய கால அவகாசம் தரப்பட்டது. இருப்பினும் சோதனையை தவிர்த்தார். இவரது விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. 2023, ஆக., 10 முதல் லட்சுமணனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

