/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி: புரோ கபடி லீக் போட்டியில்
/
தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி: புரோ கபடி லீக் போட்டியில்
தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி: புரோ கபடி லீக் போட்டியில்
தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி: புரோ கபடி லீக் போட்டியில்
ADDED : பிப் 18, 2024 09:47 PM

பஞ்சகுலா: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 74-37 என பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. நேற்று பஞ்சகுலாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணிக்கு நரேந்தர், விஷால் சகால் உள்ளிட்டோர் கைகொடுத்தனர். தமிழ் தலைவாஸ் அணியின் பிடியில் சிக்கிய பெங்கால் அணி இரண்டு முறை 'ஆல்-அவுட்' ஆனது. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 31-18 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அசத்திய தமிழ் தலைவாஸ் அணியினர், பெங்கால் வீரர்களை 4 முறை 'ஆல்-அவுட்' செய்தனர். 43 புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ் ஆட்டநேர முடிவில் 74-37 என்ற கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி 22 போட்டியில், 9 வெற்றி, 13 தோல்வி என 51 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
தமிழ் தலைவாஸ் அணிக்கு விஷால் (19 புள்ளி), நரேந்தர் (17) கைகொடுத்தனர். பெங்கால் சார்பில் கேப்டன் மனிந்தர் சிங் 9 புள்ளி பெற்றார்.