sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டாடா ஸ்டீல் செஸ்: குகேஷ் ஏமாற்றம்

/

டாடா ஸ்டீல் செஸ்: குகேஷ் ஏமாற்றம்

டாடா ஸ்டீல் செஸ்: குகேஷ் ஏமாற்றம்

டாடா ஸ்டீல் செஸ்: குகேஷ் ஏமாற்றம்


ADDED : ஜன 24, 2026 10:57 PM

Google News

ADDED : ஜன 24, 2026 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் தோல்வியடைந்தார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.

ஆறாவது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 37வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

அர்ஜுன் (கருப்பு) - ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாம் (வெள்ளை) மோதிய மற்றொரு 6வது சுற்று 58வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பிரக்ஞானந்தா (கருப்பு), ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவ் (வெள்ளை) மோதிய மற்றொரு போட்டி 122வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அரவிந்த் சிதம்பரம் (வெள்ளை), உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டாரோவ் (கருப்பு) மோதிய போட்டியும் 41வது நகர்த்தலில் 'டிரா'வில் முடிந்தது.

ஆறு சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (4.5 புள்ளி), ஜாவோகிர் சின்டாரோவ் (4.0) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். குகேஷ், அர்ஜுன் உள்ளிட்ட 5 பேர், தலா 3.0 புள்ளிகளுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us