sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்

/

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்


ADDED : பிப் 02, 2026 10:47 PM

Google News

ADDED : பிப் 02, 2026 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் 8வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு 13வது சுற்றில், இந்தியாவின் குகேஷ் (வெள்ளை), ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (கருப்பு) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 57வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (கருப்பு), 65வது நகர்த்தலில் சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), 55வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கிடம் வீழ்ந்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (வெள்ளை), நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (கருப்பு) மோதிய போட்டி 61வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

13 சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (9 புள்ளி) சாம்பியன் பட்டம் வென்றார். அடுத்த இரு இடங்களை உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டாரோ (8.5), நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (7.5) கைப்பற்றினர்.

இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ் தலா 6.5 புள்ளிகளுடன் 8வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். பிரக்ஞானந்தா (5.5) 11வது இடம் பிடித்தார். அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் தலா 4.5 புள்ளிகளுடன் 12வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us