தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-அரவிந்த் 'டிரா'

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-அரவிந்த் 'டிரா'

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-அரவிந்த் 'டிரா'


ADDED : ஜன 31, 2026 09:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 09:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் தொடரில், இந்தியாவின் குகேஷ், அரவிந்த் சிதம்பரம் மோதிய 11வது சுற்று 'டிரா' ஆனது.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.

இதன் 11வது சுற்றில், இந்தியாவின் குகேஷ் (வெள்ளை), அரவிந்த் சிதம்பரம் (கருப்பு) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 68வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு 11வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), 66வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டாரோவிடம் (கருப்பு) தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (வெள்ளை), 63வது நகர்த்தலில் ஜெர்மனியின் வின்சன்ட் கீமரிடம் வீழ்ந்தார்.

இதுவரை நடந்த 11 சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டாரோ, நாடிர்பெக் தலா 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் குகேஷ் (5.5 புள்ளி), பிரக்ஞானந்தா (4.5), அரவிந்த் சிதம்பரம் (4), அர்ஜுன் (4) முறையே 8, 11, 12, 13வது இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us