தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி


ADDED : ஜன 22, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 08:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் 5வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.

ஐந்தாவது சுற்றில் 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 51வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), 46வது நகர்த்தலில் சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவாவிடம் (கருப்பு) அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (வெள்ளி), நெதர்லாந்தின் அனிஷ் கிரி (கருப்பு) மோதிய மற்றொரு 5வது சுற்று போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (கருப்பு), 36வது நகர்த்தலில் ஜெர்மனியின் வின்சன்ட் கீமரிடம் (வெள்ளை) தோல்வியடைந்தார்.

ஐந்து சுற்றுகளின் முடிவில் ஹான்ஸ் நீமன் (அமெரிக்கா), நாடிர்பெக் (உஸ்பெகிஸ்தான்) ஜவோகிர் சின்டாரோவ் (உஸ்பெகிஸ்தான்) தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜோர்டன் வான் பாரெஸ்ட் (நெதர்லாந்து), விளாடிமிர் பெடோசீவா (சுலோவேனியா), குகேஷ் (இந்தியா) தலா 3 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us