தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கோவா அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

கோவா அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

கோவா அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்


ADDED : செப் 02, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் கோவா அணி 8-7 என மும்பை அணியை வீழ்த்தியது.

சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மும்பை, கோவா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய் 1-2 என மும்பையின் குவாட்ரி அருணாவிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மும்பையின் மரியா ஜியாவோ 2-1 என கோவாவின் யாங்ஜி லியுவை வென்றார்.

கலப்பு இரட்டையர் போட்டியில் எழுச்சி கண்ட கோவா அணியின் ஹர்மீத் தேசாய், யாங்ஜி லியு ஜோடி 2-1 என மரியா ஜியாவோ, மானவ் தாக்கர் ஜோடியை வீழ்த்தியது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஏமாற்றிய மும்பையின் மானவ் தாக்கர் 1-2 என மிஹாய் போபோசிகாவிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் கோவாவின் யாஷஸ்வினி கோர்படே 2-1 என மும்பையில் சுதிர்தா முகர்ஜியை வீழ்த்தினார். முடிவில் கோவா அணி 8-7 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. கோவா அணி 5 போட்டியில், 3 வெற்றி, 2 தோல்வியை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us