sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

செய்தி துளிகள்

/

செய்தி துளிகள்

செய்தி துளிகள்

செய்தி துளிகள்


UPDATED : பிப் 11, 2024 10:09 PM

ADDED : பிப் 11, 2024 10:08 PM

Google News

UPDATED : பிப் 11, 2024 10:09 PM ADDED : பிப் 11, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச உயரம் தாண்டுதலில் அதிகபட்சமாக 2.23 மீ., தாண்டிய இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் தங்கம் வென்றார்.

* புவனேஸ்வரில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் இந்திய அணி 4-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

* அஜர்பெய்ஜானில் நடந்த சர்வதேச பாட்மின்டன் பைனலில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-15, 22-20 என சகவீராங்கனை தன்யாவை வீழ்த்தினார்.

* பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இன்று துவங்குகிறது. ஒற்றையர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், கரண் சிங், நிக்கி பூனாச்சா தோல்வியடைந்தனர்.

* மும்பை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் அரியன் ஹார்டோனோ ஜோடி 4-6, 3-6 என சுலோவேனியாவின் ஜகுபோவிச், அமெரிக்காவின் சப்ரினா சான்டாமரியா ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

* ஜெர்மனியில் நடக்கும் 'பிரீஸ்டைல்' சேலஞ்ச் செஸ் தொடரின் கடைசி 3 சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் குகேஷ், 3.0 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தார். காலிறுதியில் குகேஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்திக்கிறார்.

* இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச், இடது முழங்கால் காயத்தால் விலகினார்.

* பல்லேகெலேயில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி (308/6, 50 ஓவர்) 155 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை (153/10, 33.5 ஓவர்) வென்றது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.






      Dinamalar
      Follow us