
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்துார்: இந்துார் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ராஷ்மிகா, வைதேகி ஜோடி முன்னேறியது.
இந்தியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இந்துாரில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி ஜோடி, ரஷ்யாவின் யாஷினா, பிரான்சின் மன்னெட் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 6-2 என கைப்பற்றியது.
தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் எளிதாக (6-1) வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஷர்மதா. லாட்வியாவின் மார்சின்கெவிகா ஜோடி, 1-6, 5-7 என கஜகஸ்தானின் ஜிபெக், கிரீசின் சாப்போ ஜோடியிடம் தோல்வியடைந்தது.