/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தாய்லாந்து குத்துச்சண்டை: பைனலில் தீபக்
/
தாய்லாந்து குத்துச்சண்டை: பைனலில் தீபக்
ADDED : மே 31, 2025 12:19 AM

பாங்காக்: தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் கிரண், தீபக் முன்னேறினர்.
தாய்லாந்தில், சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 80+ கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிரண், உக்ரைனின் போலினா செர்னென் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய கிரண் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான 75 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தீபக், தாய்லாந்தின் பீராபட் யேசு மோதினர். இதில் அசத்திய தீபக் 5-0 என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் பிரியா (57 கிலோ), சனே (70 கிலோ) வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தனர்.