/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்
/
திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்
திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்
திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்
ADDED : அக் 13, 2024 09:51 PM

லண்டன்: குளோபல் செஸ் லீக் தொடரில் திரிவேணி அணி மீண்டும் கோப்பை வென்றது.
லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடந்தது. இதன் பைனலில் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், அலாஸ்கன் நைட்ஸ் அணிகள் மோதின. இரண்டு சுற்றுகளாக பைனல் நடந்தது.
முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அலிரேசா தலைமையிலான திரிவேணி அணி 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திரிவேணி அணி 13-7 என வெற்றி பெற்றது. இரண்டு சுற்றிலும் வென்ற திரிவேணி அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
திரிவேணி அணியில் பிரான்சின் அலிரேசா, சீனாவின் யி வெய், அஜர்பெய்ஜானின் டீமோர் ராட்ஜபோவ், ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோஸ்டெனியுக், வாலண்டினா குனினா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டரோவ் பங்கேற்றனர்.