/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
/
இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
ADDED : மார் 01, 2026 09:00 PM

திரானா: மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் மீனாக் ஷி, நேஹா சங்வான் வெள்ளி வென்றனர்.
அல்பேனியாவின் திரானா நகரில், சர்வதேச மல்யுத்த 'ரேங்கிங்' தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 53 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாக் ஷி 25, பங்கேற்றார். ரஷ்யாவின் நடாலியாவிடம் 0-5 என தோல்வியடைந்த மீனாக் ஷி, பின் எழுச்சி கண்டு போலந்தின் ராக்சனா ஜாசினா (7-0), கஜகஸ்தானின் அயாஜான் மார்கஷேவா (7-0), துருக்கியின் ஜெய்னெப் யெட்கில் (2-1) ஆகியோரை வீழ்த்தினார். முடிவில் 4 போட்டியில் 3ல் வென்ற மீனாக் ஷி, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நேஹா சங்வான் 18, உக்ரைனின் சோலோமியா மோதினர். இதில் நேஹா 7-8 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 72 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் திக் ஷா மாலிக் 2-6 என, போலந்தின் விக்டோரியா சோலுஜிடம் தோல்வியடைந்தார்.
இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என, 6 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

