தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா விலகல்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா விலகல்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா விலகல்


ADDED : ஆக 12, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் இருந்து இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா விலகினார்.

சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் ஆக. 22 முதல் செப். 7 வரை நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை அறிமுகமாகும் ஜெய்ப்பூர் அணியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 26, இடம் பெற்றுள்ளார். இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இவர், சமீபத்தில் முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் ஒற்றையரில் 'ரவுண்டு-16' சுற்று வரை சென்று 22வது இடம் பிடித்தார். இதன்மூலம் மணிகா பத்ராவுக்கு பின், ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறிய 2வது இந்தியரானார்.

இந்நிலையில் கால் பாதத்தில் ஏற்பட்ட லேசான எலும்பு முறிவு காரணமாக அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் 'நம்பர்-22' வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா விலகினார். இதுகுறித்து ஸ்ரீஜா அகுலா கூறுகையில், ''கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள லேசான எலும்பு முறிவு காரணமாக 6 வாரம் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். எனவே அல்டிமேட் டேபிள் டென்னிசில் பங்கேற்க முடியாமல் போனது. இதற்காக வருந்துகிறேன்,'' என்றார்.

ஸ்ரீஜா அகுலாவுக்கு பதிலாக யூத் தேசிய சாம்பியன் (19 வயது) பட்டம் வென்ற இந்தியாவின் நித்யஸ்ரீ மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us