/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பான் சிகி, தியாவுக்கு 'ஜாக்பாட்' * அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலத்தில்...
/
பான் சிகி, தியாவுக்கு 'ஜாக்பாட்' * அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலத்தில்...
பான் சிகி, தியாவுக்கு 'ஜாக்பாட்' * அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலத்தில்...
பான் சிகி, தியாவுக்கு 'ஜாக்பாட்' * அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலத்தில்...
UPDATED : ஏப் 15, 2025 10:00 PM
ADDED : ஏப் 15, 2025 09:28 PM

மும்பை: 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' ஏலத்தில் பான் சிகி, தியாஸ், தியா, அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் நடத்தப்படுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் 6வது சீசன் (மே 29 - ஜூன் 15) ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் நேற்று மும்பையில் நடந்தது. 56 பேர் ஏலத்தில் இடம் பிடித்தனர். ஒவ்வொரு அணியும் ரூ. 50 லட்சம் வரை செலவு செய்தன. அடிப்படை தொகை என 4 பிரிவுகளாக (ரூ. 11, 7, 4, 2 லட்சம்) பிரிக்கப்பட்டன.
வீரர்களை தக்கவைக்கும் விதியின் அடிப்படையில் கோவா அணி இந்தியாவின் ஹர்மீத் தேசாயை ரூ. 14 லட்சத்துக்கு தன்வசப்படுத்தியது.
தியாவுக்கு அதிகம்
இந்தியாவின் தேசிய சாம்பியன் தியா சிட்டாலேவை ரூ. 14.1 லட்சம் கொடுத்து டில்லி அணி கொண்டு சென்றது. இவர், அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய நட்சத்திரம் ஆனார். சீனாவின் பான் சிகிக்கு அதிகபட்சமாக ரூ. 19.70 லட்சம் கொடுத்து, சென்னை அணி வாங்கியது.
ஒலிம்பிக் வீராங்கனை போர்டோ ரிகோவின் அட்ரியானா தியாசை ரூ. 19.30 லட்சத்துக்கு கோல்கட்டா வாங்கியது.
மணிகா எவ்வளவு
இந்தியா வீராங்கனை மணிகா பத்ராவுக்கு ரூ. 12 லட்சம் கொடுத்து, ஆமதாபாத் அணி தட்டிச் சென்றது. ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்ற, உலகின் 13வது இடத்திலுள்ள வீராங்கனை, ருமேனியாவின் பெர்னாடெட்டே, ரூ. 15.3 லட்சத்துக்கு, மும்பை அணி வாங்கியது.
17 வயது வீரர் அங்குர் பட்டாச்சார்ஜீயை (ரூ. 11.4 லட்சம்) கோல்கட்டா அணி தக்கவைத்தது. கஜகஸ்தான் வீரர் கிரில் கெராசிமென்கோ (ரூ. 12.4 லட்சம்), 20 வயது வீரர் பயாஸ் ஜெயின் (ரூ. 11.60 லட்சம்) என இருவரையும் சென்னை அணி வாங்கியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தின் சத்யன் (ரூ. 10 லட்சம்), தொடர்ந்து 6வது முறையாக டில்லி அணியில் இணைந்தார். ஸ்ரீஜா அகுலா (ரூ. 10 லட்சம்) ஜெய்ப்பூர் அணிக்கு சென்றார். கோல்கட்டாவின் சுதிர்த்தா முகர்ஜீ, இரு முறை ஏலத்தில் வந்த போதும் யாரும் வாங்கவில்லை.