ADDED : ஆக 10, 2026 11:20 PM

பீனிக்ஸ்: அமெரிக்காவில், தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ்
சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான தனிநபர் 'ஆல்-அரவுண்டு' பிரிவில்
அமெரிக்காவின் ஹெஸ்லி ரிவேரா 18, பங்கேற்றார். பாரிஸ் ஒலிம்பிக் (2024)
அணிகள் பிரிவில் தங்கம் கைப்பற்றிய ரிவேரா, 111.950 புள்ளிகளுடன் முதலிடம்
பிடித்து, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) சாம்பியன் ஆனார். தவிர
இவர், 'பேலன்ஸ் பீம்' பிரிவில் தங்கம், 'புளோர்' பிரிவில் வெள்ளி
பதக்கத்தை தட்டிச் சென்றார்.
சின்னர் விலகல்
சின்சினாட்டி: அமெரிக்காவில், 'மாஸ்டர்ஸ் 1000' அந்தஸ்து பெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் (ஆக. 13-23) நடக்கவுள்ளது. இதன் ஒற்றையர் பிரிவில் உலகின் 'நம்பர்-1' இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 24, பங்கேற்க இருந்தார். ஆனால் வலது முழங்காலில் காயமடைந்த இவர், சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகினார். ஏற்கனவே, 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், மணிக்கட்டு பகுதி காயத்தால் இத்தொடரில் இருந்து விலகினார்.
காலிறுதியில் ரிபாகினா
டொரான்டோ: கனடாவில், பெண்களுக்கான 'நேஷனல் பாங்க்' ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 6-4 என அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை தோற்கடித்தார். மற்ற 'ரவுண்டு-16' போட்டிகளில் அமெரிக்காவின் கோகோ காப், ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் வெற்றி பெற்றனர்.
எக்ஸ்டிராஸ்
* ஆமதாபாத்தில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கூடைப்பந்து கோப்பை தொடர் (ஆக. 13-23) நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி 'டி' பிரிவில் ஜப்பான் (ஆக. 14), தென் கொரியா (ஆக. 16), கஜகஸ்தான் (ஆக. 18) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
* நைஜீரியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் வாள்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. முதல் நாளில் இந்தியாவுக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 13 பதக்கம் கிடைத்தன.
* லண்டனில், பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் இந்திய வம்சாவளியான போதனா 11, ஷ்ரேயாஸ் ராயல் 17, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
* கொல்கட்டாவில் நடக்கும் சேலஞ்சர் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்திய வீரர் அரிஹந்த் 3-1 (11-6, 9-11, 13-11, 11-4) என, சுவிட்சர்லாந்தின் லியாண்டிரோ மன்ஹார்ட்டை வீழ்த்தினார். இந்தியாவின் பூஜா 3-2 (13-15, 11-6, 11-6, 7-11, 11-9) என, சகவீராங்கனை காஷ்வியை தோற்கடித்தார்.
