தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/முதலிடம் பிடித்தார் விஷால்: இந்திய தடகள 400 மீ., ஓட்டத்தில்

முதலிடம் பிடித்தார் விஷால்: இந்திய தடகள 400 மீ., ஓட்டத்தில்

முதலிடம் பிடித்தார் விஷால்: இந்திய தடகள 400 மீ., ஓட்டத்தில்


ADDED : செப் 10, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 09:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய தடகள சீரிஸ் 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால் முதலிடம்.

டில்லியில், இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் பைனல் நடந்தது. ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில், இலக்கை 45.36 வினாடியில் கடந்த தமிழகத்தின் விஷால் முதலிடத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் மஹாராஷ்டிராவின் ஐஸ்வர்யா (52.51 வினாடி) முதலிடம் பிடித்தார்.

பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் அபினயா (11.31 வினாடி), கிரிதாரணி (11.35) முறையே 2, 3வது இடம் பிடித்தனர். மஹாராஷ்டிராவின் ஹரிதா (11.22) முதலிடத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் (10.21 வினாடி) முதலிடத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் கவுதமி (2 நிமிடம், 05.63 வினாடி) 3வது இடம் பிடித்தார்.

பெண்களுக்கான வட்டு எறிதலில் ஹரியானாவின் சீமா (56.52 மீ.,), பிரியா (54.82), நிதி ராணி (54.16) முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப்பில் தஜிந்தர்பால் சிங் டூர் (20.64 மீ.,) முதலிடத்தை கைப்பற்றினார்.

தேசிய சாதனை

பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் உ.பி.,யின் தன்யா சவுத்ரி, அதிகபட்சமாக 68.35 மீ., எறிந்து புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், கடந்த ஜூன் மாதம் நடந்த போட்டியில், உ.பி.,யின் அனுஷ்கா யாதவ் (67.02 மீ.,) தேசிய சாதனை படைத்திருந்தார். நேற்று, அனுஷ்கா (66.34 மீ.,) 2வது இடத்தை கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us