/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வித்யா ராம்ராஜ் விலகல்: பெடரேஷன் கோப்பை தடகளத்தில்
/
வித்யா ராம்ராஜ் விலகல்: பெடரேஷன் கோப்பை தடகளத்தில்
வித்யா ராம்ராஜ் விலகல்: பெடரேஷன் கோப்பை தடகளத்தில்
வித்யா ராம்ராஜ் விலகல்: பெடரேஷன் கோப்பை தடகளத்தில்
ADDED : மே 12, 2024 11:47 PM

புவனேஸ்வர்: பெடரேஷன் கோப்பை தடகளத்தின் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இருந்து காயம் காரணமாக தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் விலகினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 25, பங்கேற்க இருந்தார். 'நடப்பு சாம்பியனான' இவர், முதுகுப்பகுதி காயத்தால் பைனலில் இருந்து விலகினார். சமீபத்தில் பகாமசில் நடந்த 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் இவர் இடம் பிடித்திருந்த இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பஞ்சாப்பின் வீர்பால் கவுர் (59.43 வினாடி), கேரளாவின் சாலினி (ஒரு நிமிடம், 00.73 வினாடி), பஞ்சாப்பின் ராமன்தீப் கவுர் (ஒரு நிமிடம், 01.29 வினாடி) முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஆண்களுக்கான 4x400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் சந்தோஷ் குமார் (50.04 வினாடி), பஞ்சாப்பின் நிகில் பரத்வாஜ் (50.92 வினாடி), குஜராத்தின் தவால் மகேஷ் உதேகர் (51.13 வினாடி) முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.