/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
விவான் கபூர் 'வெள்ளி': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
/
விவான் கபூர் 'வெள்ளி': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
விவான் கபூர் 'வெள்ளி': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
விவான் கபூர் 'வெள்ளி': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
ADDED : அக் 17, 2024 10:31 PM

புதுடில்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் விவான் கபூர் ('டிராப்') வெள்ளி வென்றார்.
டில்லியில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல் நடக்கிறது. ஆண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விவான் கபூர், 120 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் பவுனீஷ் (117 புள்ளி) 8வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் விவான் கபூர், 44 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் நருகா (121 புள்ளி), மைராஜ் அகமது கான் (119) முறையே 5, 6வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். பைனலில் அசத்திய அனந்த் ஜீத் சிங் 43 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் மைராஜ் அகமது கான் (16) 6வது இடத்தை கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்துள்ளன.