தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வாஷிங்டன் ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

வாஷிங்டன் ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

வாஷிங்டன் ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்


ADDED : ஜன 30, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், வீர் சோட்ரானி முன்னேறினர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், தென் ஆப்ரிக்காவின் ஹேலி வார்டு மோதினர். அனாஹத் 3-1 (11-5, 11-8, 12-14, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், மெக்சிகோவின் லியோனல் கார்டனாஸ் மோதினர். இதில் வேலவன் 2-3 (11-4, 5-11, 9-11, 11-9, 8-11) என போராடி தோல்வியடைந்தார்.

மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, பிரான்சின் பாப்டிஸ்ட் மசோட்டி மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-2 (11-6, 7-11, 8-11, 11-1, 11-9) என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us