/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பளுதுாக்குதல் ஜோஷ்னா 'தங்கம்'
/
பளுதுாக்குதல் ஜோஷ்னா 'தங்கம்'
ADDED : டிச 20, 2024 10:27 PM

தோகா: ஆசிய யூத் பளுதுாக்குதலில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா (40 கிலோ) தங்கம் வென்றார்.
கத்தார் தலைநகர் தோகாவில், ஆசிய யூத் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. யூத் பெண்களுக்கான 40 கிலோ பிரிவில், ஒட்டுமொத்தமாக 135 கிலோ ('ஸ்னாட்ச்' 60 + 'கிளீன் அண்ட் ஜெர்க்' 75 கிலோ) பளுதுாக்கிய இந்தியாவின் ஜோஷ்னா சபர், புதிய யூத் ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
யூத் பெண்களுக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் பாயல், அதிகபட்சமாக 155 கிலோ ('ஸ்னாட்ச்' 70 + 'கிளீன் அண்ட் ஜெர்க்' 85 கிலோ) பளுதுாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரீத்திஸ்மிதா போய் (145 கிலோ) 5வது இடம் பிடித்தார்.
ஜூனியர் பெண்களுக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் பாயல் (155 கிலோ) வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆகான்ஷா (151 கிலோ) 5வது இடம் பிடித்தார்.
யூத் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் பாபுலால் ஹெம்புரோம் (197 கிலோ) வெண்கலம் வென்றார்.
இதுவரை இந்தியாவுக்கு இரண்டு தங்கம், இரண்டு வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்துள்ளது.