உள்ளடக்கத்திற்கு செல்ல

பளுதுாக்குதல்: யாஷ் 'வெள்ளி' * ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில்
பளுதுாக்குதல்: யாஷ் 'வெள்ளி' * ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில்
ADDED : மே 05, 2026 11:24 PM

அ நிறம் | அளவு
இஸ்மெய்லியா: ஜூனியர் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யாஷ், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துருக்கியின் இஸ்மெய்லியா நகரில் ஜூனியர் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் யாஷ் கந்தகலே பங்கேற்றார். முதலில் நடந்த ஸ்னாட்ச் பிரிவில் யாஷ், 140 கிலோ எடை துாக்கி, வெள்ளி வென்றார்.
அடுத்து நடந்த 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் யாஷ், 169 கிலோ துாக்க, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக 309 கிலோ துாக்கி, இரண்டாவது இடம் பிடித்த யாஷ், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பிலிப்பைன்சின் ஆல்பர்ட் (326 கிலோ), ஈகுவடாரின் ஜிம்மி லோபெஸ் (301) தங்கம், வெண்கலம் வென்றனர்.
