/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்
/
ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்
ADDED : ஆக 19, 2024 11:09 PM

மும்பை: மும்பையில் வெஸ்டர்ன் இந்தியா பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பில்லியர்ட்ஸ் போட்டியில் ஓ.என்.ஜி.சி., அணியின் மகாராஷ்டிரா வீரர் பங்கஜ் அத்வானி, சாம்பியன் ஆனார்.
நேற்று ஸ்னுாக்கர் போட்டி நடந்தது. 27 முறை உலக சாம்பியன் பட்டம் ஆன பங்கஜ் அத்வானி, அரையிறுதியில் 5-1 என ரயில்வே வீரர் பைசல் கானை வீழ்த்தினார்.
மற்றொரு அரையிறுதியில் ரயில்வே வீரர் கமால் சாவ்லா, 5-2 என ஸ்ரீகிருஷ்ணாவை வென்றார்.
பின் நடந்த பைனலில் பங்கஜ் அத்வானி, கமால் சாவ்லா மோதினர். இதில் அத்வானி 6-4 என்ற பிரேம் கணக்கில் (11-72, 31-58, 95-40, 52-42, 69-43, 43-74, 22-59, 75-62, 84-58, 58-10) வெற்றி பெற்றார்.
பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் என இரு பிரிவிலும் கோப்பை வென்று அசத்தினார் அத்வானி.

