ADDED : செப் 09, 2024 11:40 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் தொடர் வரும் அக். 18ல் ஐதராபாத்தில் துவங்குகிறது.
புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியானது. லீக் போட்டிகள் மூன்று நகரங்களில் நடத்தப்படுகிறது. முதற்கட்ட போட்டிகள் ஐதராபாத்தில் வரும் அக். 18 முதல் நவ. 9 வரை நடக்கும். அடுத்த இரண்டு கட்டப் போட்டிகள் கிரேட்டர் நொய்டா (நவ. 10 - டிச. 1), புனேயில் (டிச. 3-24) நடக்கவுள்ளன.
அக். 18 ல் நடக்கும் முதல் போட்டியில் பவான் ஷெராவத்தின் தெலுங்கு டைட்டன்ஸ் அணி, பர்தீப் நார்வலின் பெங்களூரு அணியை சந்திக்கிறது. அன்று நடக்கும் 2வது போட்டியில் மும்பை, டில்லி அணிகள் விளையாடுகின்றன. லீக், 'பிளே-ஆப்' சுற்றுக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
சமீபத்தில் மும்பையில் (ஆக. 15-16), 11வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் டில்லி அணி சார்பில் நவீன் குமார் அதிகபட்சமாக 1.015 கோடிக்கு ஒப்பந்தமானார். தவிர இந்த ஏலத்தில், அதிகபட்சமாக 8 பேர், தலா ரூ. ஒரு கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.