/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்னுாக்கர் பிரிமியர் லீக் எப்போது
/
ஸ்னுாக்கர் பிரிமியர் லீக் எப்போது
ADDED : ஏப் 24, 2024 10:27 PM

பெங்களூரு: ஸ்னுாக்கர் பிரிமியர் லீக் தொடர் பெங்களூருவில் மே 4ல் துவங்குகிறது.
ஐ.பி.எல்., பாணியிலான ஸ்னுாக்கர் பிரிமியர் லீக் முதல் சீசன் பெங்களூருவில் வரும் மே 4 முதல் 10 வரை நடக்கவுள்ளது. 'லைட்னிங்', 'சைக்ளோன்', 'சம்மர்', 'தண்டர்ஸ்டிரோம்', 'மான்சூன்', 'ஹரிக்கேன்' உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு அணியில் 7 பேர் இடம் பெற்றிருப்பர்.
லீக் சுற்றில் ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் மே 10ல் நடக்கும் பைனலில் விளையாடும்.
இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் ஏப். 20ல் நடந்தது. மொத்தம் 56 பேர் தேர்வாகினர். டொர்னாடோ டைகர்ஸ் அணி சார்பில், 27 முறை பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி, ரூ. 1.2 கோடிக்கு ஒப்பந்தமானார். இவரை தவிர பெண்கள் தேசிய சாம்பியன் வித்யா பிள்ளை, சவுரவ் கோத்தாரி, ஆதித்யா மேத்தா, ஆராத்யா நாயக் உள்ளிட்டோர் பல்வேறு அணிகளில் இடம் பிடித்தனர்.
பங்கஜ் அத்வானி கூறுகையில், ''இத்தொடர் மூலம் பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் போட்டிகளின் மீது இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகும். நிறைய பேர் இவ்விளையாட்டை தேர்வு செய்வர்,'' என்றார்.

