தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மனு பாகருக்கு கிடைக்குமா 'கேல் ரத்னா' விருது

மனு பாகருக்கு கிடைக்குமா 'கேல் ரத்னா' விருது

மனு பாகருக்கு கிடைக்குமா 'கேல் ரத்னா' விருது


ADDED : டிச 23, 2024 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'கேல் ரத்னா' விருதுக்கு ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்) பரிந்துரைக்கப்பட்டனர். துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் பெயர் இடம் பெறாததால் சர்ச்சை எழுந்தது.

விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கம்/கூட்டமைப்பு பரிந்துரை செய்து வருகிறது.

நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு, ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 வெண்கலம் பெற்றுத்தந்த இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார், பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை மனு பாகர் பெயர் இடம் பெறாதது சர்ச்சை ஏற்படுத்தியது.

'கேல் ரத்னா' விருதுக்கு மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் மனு பாகர் விண்ணப்பித்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மான்டவியா கூறுகையில், ''பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கான இறுதிப்பட்டியல் இன்னும் முடிவாகவில்லை. இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, ஓரிரு நாட்களில் வெளியாகும் பட்டியலில் சேர்க்கப்படலாம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us