/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்: புரோ கபடி லீக் தொடரில்
/
எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்: புரோ கபடி லீக் தொடரில்
எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்: புரோ கபடி லீக் தொடரில்
எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்: புரோ கபடி லீக் தொடரில்
ADDED : ஆக 28, 2025 10:38 PM

விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரோ கபடி லீக் 12வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, தமிழ் தலைவாஸ், பாட்னா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 108 போட்டிகள், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டில்லி என 4 இடங்களில் நடக்கவுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் சுற்றில் மோதும். முடிவில், முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அடுத்த நான்கு இடம் பிடிக்கும் அணிகள், 'பிளே-ஆப்' சுற்றில் பங்கேற்கும். இதில் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றுக்கான அட்டவணை பின்னர் வெளியாகும்.
தமிழ் தலைவாஸ் அணி, கடந்த இரு சீசனில் 9வது இடம் பிடித்து ஏமாற்றியது. கடந்த 2022ல் 4வது இடம் பிடித்த தமிழ் தலைவாஸ், இம்முறை எழுச்சி கண்டால் முதன்முறையாக கோப்பை வெல்லலாம். புரோ லீக் கபடி வராலற்றில் பாட்னா அணி, அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் ஆனது. ஜெய்ப்பூர் 2, பெங்கால், பெங்களூரு, டில்லி, ஹரியானா, புனே, மும்பை அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
விசாப்பட்டினத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ், பெங்களூரு - புனே அணிகள் விளையாடுகின்றன.

