/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்கா ஆதிக்கம்
/
குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்கா ஆதிக்கம்
ADDED : பிப் 22, 2026 11:06 PM

மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. இதன் கலப்பு அணிகளுக்கான 'பிரீஸ்டைல்' பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்கா தங்கம் வென்றது. இது, இம்முறை அமெரிக்காவுக்கு கிடைத்த 11வது தங்கம். குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக தங்கம் வென்று தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது அமெரிக்கா. இதற்கு முன், 2002ல் அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் நடந்த போட்டியில் 10 தங்கம் வென்றிருந்தது.
மயாமி அதிர்ச்சி
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இன்டர் மயாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி., அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய மெஸ்ஸியின் இன்டர் மயாமி அணி 0-3 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
-----
எக்ஸ்டிராஸ்
* ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில், 'கேலோ இந்தியா' குளிர்கால விளையாட்டு 6வது சீசன் இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 30 மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
* சண்டிகரில் நடந்த இந்திய ஓபன் நடை போட்டிக்கான பாதி மாரத்தானில் (21 கி.மீ.,) பஞ்சாப் வீரர் சாஹில் (ஒரு மணி நேரம், 25 நிமிடம், 48 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார். இரண்டு வினாடி தாமதமாக வந்த தமிழகத்தின் செர்வின் செபாஸ்டியன் (1:25:50) வெள்ளி வென்றார். ஹரியானாவின் ஹர்தீப் (1:26:03) வெண்கலம் கைப்பற்றினார்.
* டில்லி மாரத்தான் ஓட்டத்தில் (42.2 கி.மீ.,) சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களான கார்த்திக் கார்கேரா (2 மணி நேரம், 13 நிமிடம், 10 வினாடி), கோபி தோனக்கல் (2:13:12), மன் சிங் (2:13:15), ஆசிய விளையாட்டுக்கு (2026) தகுதி பெறுவதற்கான இலக்கை (2:15:04) எட்டினர்.
* பெங்களூருவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 0-6, 1-6 என, பெல்ஜியத்தின் ஹேன் வான்டெவின்கெல்லிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

