sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குளிர்கால ஒலிம்பிக் நிறைவு

குளிர்கால ஒலிம்பிக் நிறைவு

குளிர்கால ஒலிம்பிக் நிறைவு


ADDED : பிப் 23, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 10:57 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெரோனா: இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடந்தது. மொத்தம் 17 நாட்கள் நடத்த இப்போட்டி நிறைவு பெற்றது.

வெரோனாவில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில், இத்தாலி பிரதமர் மெலோனி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) தலைவர் கிர்ஸ்டி கோவன்ட்ரி, இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி தலைவர் லுாசியானோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழாவில், 1500க்கும் மேற்பட்ட இத்தாலி நடன கலைஞர்களின் ஆடல், பாடல், சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின.

ஒலிம்பிக் கொடி, பாரம்பரிய முறைப்படி ஐ.ஓ.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை, அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை (2030, ஆல்ப்ஸ், நைஸ்) நடத்தும் பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஐ.ஓ.சி., வழங்கியது.

நிகழ்ச்சியின் முடிவில், துவக்க விழாவில் மிலன், கார்டினா நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அணைக்கப்பட்டது.

நார்வே முதலிடம்

இம்முறை 18 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என, 41 பதக்கங்களை அள்ளிய நார்வே, முதலிடத்தை தட்டிச் சென்றது. அடுத்த இரு இடங்களை அமெரிக்கா (12 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம்), நெதர்லாந்து (10 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றின. போட்டியை நடத்திய இத்தாலி, 10 தங்கம், 6 வெள்ளி, 14 வெண்கலம் என, 30 பதக்கம் வென்று 4வது இடம் பிடித்தது.

ரோமில் ஒலிம்பிக்

வரும் 2040ல் ரோமில், ஒலிம்பிக் போட்டியை நடத்த, இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி பரிசீலித்து வருவதாக, ஐ.ஓ.சி., தலைவர் கோவன்ட்ரி தெரிவித்தார்.

அடுத்து பாராலிம்பிக்

இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் வரும் மார்ச் 6-15ல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, மார்ச் 6ல் வெரோனாவில் நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us