/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பெண்களுக்கு அனுமதி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
/
பெண்களுக்கு அனுமதி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
பெண்களுக்கு அனுமதி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
பெண்களுக்கு அனுமதி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூன் 23, 2024 12:14 AM

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2வது ஒலிம்பிக் 1900ல் நடந்தது. போட்டிகள் சுமார் 5 மாதம் (மே 14 - அக்., 28) நடந்தன. 26 நாடுகளை சேர்ந்த 1226 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் கிரிக்கெட் அறிமுகமானது. நான்கு அணிகள் பங்கேற்க இருந்தன. கடைசி நேரத்தில் பெல்ஜியம், நெதர்லாந்து விலகின. பின் நடந்த இரண்டு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி, 158 ரன் வித்தியாசத்தில் பிரான்சை வென்றது. இங்கிலாந்து அணிக்கு வெள்ளி, பிரான்சிற்கு வெண்கலப்பதக்கம் அளிக்கப்பட்டன. மீண்டும் 2028 (லாஸ் ஏஞ்சல்ஸ்) ஒலிம்பிக்கில் 'டி-20' கிரிக்கெட் இடம் பெற உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இங்கிலாந்தின் சார்லட் கூப்பர்தான் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் (டென்னிஸ்) சாம்பியன் ஆன முதல் பெண்.
இந்தியா சார்பில் முதன் முறையாக பங்கேற்ற பிரிட்டன் வம்சாவளியை சேர்ந்த நார்மன் பிரிட்சர்ட் 2 வெள்ளிப் பதக்கம் (200 மீ., ஓட்டம், 200 மீ., தடை ஓட்டம்) கைப்பற்றினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற முதல் இந்திய, ஆசிய வீரரானார்.
எக்ஸ்டிராஸ்
102 பதக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் 27 தங்கம், 38 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்கள் வென்ற பிரான்ஸ் முதலிடம் பிடித்தது. அமெரிக்காவுக்கு 2வது இடம் (19 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம்) பெற்றது.