உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 29, 2026 10:13 PM

அ நிறம் | அளவு
கார்லோ: உலக பில்லியர்ட்ஸ் தொடரில் இந்தியாவின் சவுரவ் கோத்தாரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அயர்லாந்தில், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி மோதினர். இதில் சவுரவ் கோத்தாரி 1133-477 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மீண்டும் கோப்பை வென்றார்.
கொல்கட்டாவை சேர்ந்த சவுரவ் கோத்தாரி 41, மூன்றாவது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே 2018, 2025ல் கோப்பை வென்றிருந்தார்.
இதுகுறித்து சவுரவ் கோத்தாரி கூறுகையில், ''இந்த வெற்றியை, சமீபத்தில் மறைந்த எனது தந்தை மனோஜ் கோத்தாரிக்கு அர்ப்பணிக்கிறேன். மீண்டும் உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது ஸ்பெஷலான தருணம்,'' என்றார்.
