/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக குத்துச்சண்டை: பைனலில் நிஷா
/
உலக குத்துச்சண்டை: பைனலில் நிஷா
ADDED : அக் 31, 2024 06:50 PM

கொலராடோ: உலக குத்துச்சண்டை (19 வயது) பைனலுக்கு இந்தியாவின் நிஷா (51 கிலோ), சுப்ரியா தேவி (54), பார்த்தவி (65) முன்னேறினர்.
அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 51 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிஷா, அமெரிக்காவின் லைலா ஜாகிரோவா மோதினர். இதில் நிஷா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். பெண்களுக்கான 54 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுப்ரியா தேவி 5-0 என உக்ரைனின் மெல்னிக்கை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் (65 கிலோ) இந்தியாவின் பார்த்தவி கிரேவால் 5-0 என, ஆஸ்திரேலியாவின் இந்தியானா டிம்சை வீழ்த்தினார். இதனையடுத்து பெண்கள் பிரிவில் 10 இந்திய வீராங்கனைகளும் பைனலுக்குள் நுழைந்தனர்.
ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் ராகுல் (75 கிலோ), ஹேமந்த் சங்வான் (90) வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ரிஷி சிங் (50 கிலோ), கிரிஷ் பால் (55), சுமித் (70), ஆர்யன் (85) அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றனர்.