தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக செஸ்: குகேஷ் ஏமாற்றம்

உலக செஸ்: குகேஷ் ஏமாற்றம்

உலக செஸ்: குகேஷ் ஏமாற்றம்


UPDATED : நவ 30, 2026 12:08 AM

ADDED : நவ 30, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:08 AM ADDED : நவ 30, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெனிவா: உலக செஸ் சாம்பியன்ஷிப் 5வது சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் சிந்தாரோவிடம் தோல்வியடைந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் மொத்த பரிசுத் தொகை ரூ. 23.37 கோடி. இதில் நடப்பு சாம்பியனும், உலகின் 'நம்பர்-26' வீரருமான இந்தியாவின் குகேஷ், 20, கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த, உலகின் 'நம்பர்-4' வீரர் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ், 20, விளையாடுகின்றனர். இதில் 'கிளாசிக்கல்' முறையில் மொத்தம் 14 சுற்று நடக்கிறது. முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம். முதல் நான்கு சுற்று 'டிரா' ஆனது.

நேற்று 5வது சுற்று நடந்தது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். ஆட்டத்தின் 47வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஐந்து சுற்றின் முடிவில் குகேஷ் 2.0 - 3.0 என பின்தங்கி உள்ளார். இன்று 6வது சுற்று நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us