ADDED : டிச 08, 2024 09:48 PM

சிங்கப்பூர்: உலக செஸ் தொடரின் 11வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரில், உலக செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்-5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியனும்', உலகின் 'நம்பர்-15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 10 சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா 5.0 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இதன் 11வது சுற்றில் தமிழகத்தின் குகேஷ், வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் ஐந்து நகர்த்தலுக்கு பின் குகேஷ் ஆதிக்கம் செலுத்தினார். சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ், 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இதுவரை நடந்த 11 சுற்றுகளின் முடிவில் 2 வெற்றி, 8 'டிரா', ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை பெற்றார். டிங் லிரென் 5 புள்ளிகளுடன் (ஒரு வெள்ளி, 8 'டிரா', 2 தோல்வி) உள்ளார்.