/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக செஸ்: பிரக்ஞானந்தா பங்கேற்பு
/
உலக செஸ்: பிரக்ஞானந்தா பங்கேற்பு
ADDED : டிச 02, 2024 11:07 PM

லாசன்னே: உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட 5 பேர் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வரும் டிச. 26-31ல் உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் டிச. 26-28ல் நடக்கும். டிச. 29 ஓய்வு நாள். பின், டிச. 30-31ல் 'பிளிட்ஸ்' சுற்று போட்டிகள் நடத்தப்படும்.
உலகின் முன்னணி நட்சத்திரங்கள் விளையாடும் இத்தொடரில், இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்கின்றனர். ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி, துரோணவள்ளி ஹரிகா களமிறங்குகின்றனர்.
இவர்களை தவிர, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, அமெரிக்காவின் பேபியானோ காருணா, சோ வெஸ்லே, ஹிகாரு நகமுரா, லெவான் ஆரோனியன், ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோஸ்டெனியுக், உக்ரைனின் மரியா முசிசுக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர்.