தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஹாக்கி: சாதிக்குமா இந்தியா

உலக ஹாக்கி: சாதிக்குமா இந்தியா

உலக ஹாக்கி: சாதிக்குமா இந்தியா


ADDED : மார் 12, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 09:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதியில் இன்று இந்தியா, இத்தாலி பெண்கள் அணிகள் மோதுகின்றன.

பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் ஆக. 14-30ல் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் நடக்கவுள்ளது.

இதற்கான தகுதிச் சுற்று, ஐதராபாத்தில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பிடித்த இங்கிலாந்து (ஏ1), இத்தாலி (ஏ2), இந்தியா (பி1), ஸ்காட்லாந்து (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா - இத்தாலி, இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

லீக் சுற்றில் உருகுவே அணியை வீழ்த்திய இந்தியா, ஸ்காட்லாந்துக்கு எதிராக 'டிரா' செய்தது. கடைசி போட்டியில் வேல்சை வீழ்த்திய இந்தியா, 'பி' பிரிவில் முதலிடம் பிடித்தது. ஏற்கனவே உலக கோப்பை இடத்தை உறுதி செய்த இந்திய அணிக்கு நவ்னீத் கவுர் (4 கோல்), அன்னு, லால்ரெம்சியாமி, இஷிகா, ருதுஜா, சாக் ஷி, சுனேலிதா (தலா ஒரு கோல்) நம்பிக்கை தருகின்றனர். வேல்ஸ் அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்த நவ்னீத் கவுர் மீண்டும் கைகொடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம்.

இங்கிலாந்திடம் வீழ்ந்த இத்தாலி, ஆஸ்திரியாவை வீழ்த்தி எழுச்சி கண்டது. அடுத்து தென் கொரியாவுடன் 'டிரா' செய்தது. இன்று இந்தியாவுக்கு சவால் தர முயற்சிக்கலாம்.

இதுவரை

சர்வதேச அரங்கில் இதுவரை மோதிய 7 போட்டியில், இந்தியா 5, இத்தாலி ஒரு முறை வென்றன. ஒரு போட்டி 'டிரா' ஆனது.

தகுதியானது எப்படி

உலக கோப்பை தகுதிச் சுற்று சான்டியாகோ (சிலி), ஐதராபாத் (இந்தியா) என இரு இடங்களில் (தலா 8 அணிகள்) நடக்கின்றன. இதில், 'டாப்-3' இடம் பிடிக்கும் 6 அணிகளுடன், 4வது இடம் பிடிக்கும் இரு அணிகளில் இருந்து சிறந்த 'ரேங்கிங்' (தரவரிசை) பெற்றுள்ள ஒரு அணி பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். இதன்படி, சான்டியாகோவில் நடந்த தகுதிச் சுற்றில், உலகின் 'நம்பர்-15' ஜப்பான் அணி 4வது இடம் பிடித்துள்ளது. ஒருவேளை அரையிறுதி, 3வது இடத்துக்கான போட்டியில் உலகின் 'நம்பர்-9' இந்திய அணி தோல்வியடைந்தால் 4வது இடம் பிடிக்கும். எனவே தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் இடம் உறுதியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us