sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜூலை 11, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூலை 11, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரையிறுதியில் பிரான்ஸ்

லா பால்மா: ஸ்பெயினில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கூடைப்பந்து (18 வயது) காலிறுதியில் பிரான்ஸ் அணி 72-34 என இத்தாலியை வென்றது. ஸ்பெயின் அணி 89-65 என செர்பியாவை தோற்கடித்தது. அரையிறுதியில் ஸ்பெயின், பிரான்ஸ் மோதுகின்றன.

நார்வே 'ஹாட்ரிக்'ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நார்வே அணி 4-3 என ஐஸ்லாந்தை வென்றது. ஏற்கனவே சுவிட்சர்லாந்து, பின்லாந்தை வீழ்த்திய நார்வே 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

துருக்கி முன்னேற்றம்

டிரானா: அல்பானியாவில் நடக்கும் பெண்கள் (16 வயது) ஐரோப்பிய வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் துருக்கி அணி 3-0 என்ற கணக்கில் கொசோவா அணியை வீழ்த்தியது. ஏழு போட்டியில், 5ல் வென்ற துருக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

எக்ஸ்டிராஸ்

* கர்நாடகாவில் நடக்கவுள்ள கே.எஸ்.சி.ஏ., 'டி-20' தொடருக்கான 4வது சீசனில் (ஆக. 11-27) கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால், தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டனர். இம்முறை ரசிகர்கள் இல்லாமல், காலி மைதானத்தில் போட்டிகள் நடக்கவுள்ளன.

* ''போட்டியில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது எப்படி என்பதை முன்னாள் இந்திய கேப்டன் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்,'' என, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்தார்.

* ஸ்பெயினில் நடக்கும் உலக கோப்பை வில்வித்தை, தனிநபர் காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-144 என துருக்கியின் ஹசல் பருனை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை பர்னீத் கவுர் 142-141 என துருக்கியின் கியூர் கிர்டியை வென்றார்.






      Dinamalar
      Follow us