sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜூலை 12, 2025 10:47 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பலே பல்கேரியா

ஒசிஜெக்: குரோஷியாவில் நடக்கும் பெண்கள் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் (19 வயது) காலிறுதியில் பல்கேரியா அணி 3-1 என பிரேசிலை வீழ்த்தியது. மற்ற காலிறுதியில் துருக்கி (எதிர்- சீனா), போலந்து (எதிர்- ஜப்பான்), அமெரிக்கா (எதிர்- இத்தாலி) அணிகள் வென்றன.

ஸ்பெயின் 'ஹாட்ரிக்'

பெர்ன்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 3-1 என, இத்தாலி அணியை வீழ்த்தியது. ஏற்கனவே போர்ச்சுகல், பெல்ஜியத்தை வென்ற ஸ்பெயின் அணி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் பிரமாதம்

பிர்னோ: செக்குடியரசில் நடக்கும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து லீக் போட்டியில் பிரான்ஸ், பிரேசில் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 83-47 (27-12, 23-16, 16-8, 17-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பைனலில் நியூயார்க்

டல்லாஸ்: அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் தகுதிச் சுற்று-2ல் கேப்டன் பூரன் (52*), போலார்டு (47*) கைகொடுக்க நியூயார்க் அணி (172/3), டெக்சாஸ் அணியை (166/5) வீழ்த்தியது. பைனலில் (ஜூலை 14) வாஷிங்டன், நியூயார்க் அணிகள் மோதுகின்றன.






      Dinamalar
      Follow us