sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜூலை 14, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்கேரியா கலக்கல்

ஒசிஜெக்: குரோஷியாவில் நடந்த பெண்கள் (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் பைனலில் பல்கேரியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பல்கேரிய அணி 3-1 (21-25, 25-16, 25-17, 29-27) என வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது.

காலிறுதியில் இங்கிலாந்து

செயின்ட் காலன்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் யூரோ கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 6-1 என, வேல்சை வீழ்த்தியது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இதில் சுவீடனை சந்திக்கிறது.

ஜெர்மனிக்கு கோப்பை

அலன்யா: துருக்கியில் நடந்த ஐரோப்பிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவு பைனலில் ஜெர்மனி அணி 2-1 என ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பெண்கள் பிரிவு பைனலில் ஸ்பெயின் அணி 2-1 என நார்வேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்பெயின் 'சாம்பியன்'

லா பால்மா: ஸ்பெயினில் நடந்த பெண்கள் (18 வயது) 'யூரோ' கூடைப்பந்து பைனலில் பின்லாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. சொந்த மண்ணில் அசத்திய ஸ்பெயின் அணி 81-72 என்ற கணக்கில் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது.

எக்ஸ்டிராஸ்

* டோக்கியோவில், ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென், உன்னதி ஹூடா, இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி பங்கேற்கின்றனர்.

* இந்திய தடகள வீராங்கனை (100 மீ., தடை தாண்டும் ஓட்டம்) ஜோதி, வலது முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்தார். இதனால் டோக்கியோவில் நடக்கவுள்ள உலக தடக சாம்பியன்ஷிப் (செப். 13-21) போட்டியில் இருந்து விலகினார். அடுத்த ஆண்டு போட்டிக்கு திரும்ப உள்ளார்.

* தாய்லாந்தில் நடக்கும் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் (16 வயது) லீக் போட்டியில் இந்திய அணி 3-0 என, சீனாவை வென்றது. முதலிரண்டு போட்டியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

* சீனாவில், பெண்கள் ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடர் நடக்கிறது. இதன் 'டிவிசன்-பி' முதல் சுற்றுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி 39-83 என, சீனதைபே அணியிடம் தோல்வியடைந்தது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் தஹிடி அணியை சந்திக்கிறது.

* ஐ.சி.சி., சார்பில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரராக தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் தேர்வு. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பேட்டிங்கில் அசத்திய இவர், 2வது இன்னிங்சில் 136 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். சிறந்த வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் 'ஆல்-ரவுண்டர்' ஹேலி மேத்யூஸ் தேர்வானார்.






      Dinamalar
      Follow us