sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜூலை 20, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென் ஆப்ரிக்கா 'சாம்பியன்'

ரோவிகோ: இத்தாலியில் நடந்த உலக ரக்பி சாம்பியன்ஷிப் (20 வயது) பைனலில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்ரிக்கா 23-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2012, 2025) கோப்பை வென்றது.

அரையிறுதியில் ஜெர்மனி

பசல்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதியில் ஜெர்மனி அணி 6-5 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பிரான்சை வீழ்த்தியது. அரையிறுதியில் (ஜூலை 23) ஜெர்மனி, ஸ்பெயின் மோதுகின்றன.

பைனலில் அமெரிக்கா

புர்னோ: செக்குடியரசில் நடக்கும் பெண்கள் (19 வயது) உலக கோப்பை கூடைப்பந்து அரையிறுதியில் அமெரிக்க அணி 70-58 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி 87-75 என கனடாவை தோற்கடித்தது.

பிரான்ஸ் ஏமாற்றம்

லில்லி: பிரான்சில் நடந்த ஆண்கள் (18 வயது) 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் பைனலில் பிரான்ஸ் அணி 2-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. ஜெர்மனி அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

எக்ஸ்டிராஸ்


* அமெரிக்காவில் நடந்த தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், 'டெக்னிகல் நாக்அவுட்' முறையில் அமெரிக்காவின் லக்வான் ஈவன்சை வீழ்த்தினார். இது, தொழில்முறை போட்டியில் இவரது 'ஹாட்ரிக்' வெற்றியானது.

* அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை (2027, 2029, 2031) இங்கிலாந்தில் நடத்திட, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அனுமதி வழங்கியது. ஏற்கனவே இங்கு, மூன்று முறை (2021, 2023, 2025) பைனல் நடந்தது.

* எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் அனாஹத் சிங், கரண் யாதவ், அனிகா துபே, சந்தேஷ், ருத்ரா சிங் உள்ளிட்ட 12 பேர் பங்கேற்கின்றனர்.

* பஹ்ரைனில் நடக்கும் உலக '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி, கமல் சாவ்லா, பிரிஜேஷ் தமனி, பராஸ் குப்தா, மனன் சந்திரா, 'நாக்-அவுட்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தனர்.

* ஹராரேயில் நடந்த முத்தரப்பு 'டி-20' லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி (145/3, 17.2 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை (144/6, 20 ஓவர்) வீழ்த்தியது.

* கனடாவில் நடக்கவுள்ள டொரான்டோ ஓபன் டென்னிஸ் தொடரில் (ஜூலை 26 - ஆக. 7) இருந்து ஜானிக் சின்னர் (இத்தாலி, வலது முழங்கை), ஜோகோவிச் (செர்பியா, இடுப்பு பகுதி) காயத்தால் விலகினர்.






      Dinamalar
      Follow us