sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜூலை 25, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலிறுதியில் ரடுகானு

அமெரிக்காவில் நடக்கும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அர்ஜென்டினா அசத்தல்

ஈகுவடாரில் நடக்கும் பெண்களுக்கான கோபா அமெரிக்கா கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என ஈகுவடாரை வீழ்த்தியது. ஏற்கனவே உருகுவே, சிலி, பெருவை வீழ்த்திய அர்ஜென்டினா (12 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் பிரமாதம்

உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 3-0 என அல்ஜீரியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பல்கேரியா அணி 2-1 என சீனாவை தோற்கடித்தது.

கனடா கலக்கல்

உருகுவேயில் நடக்கும் பெண்களுக்கான பான் அமெரிக்கன் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கனடா அணி 7-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வென்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா 3-0 என, உருகுவே அணியை வீழ்த்தியது.

எக்ஸ்டிராஸ்

* பெண்கள் பிரிமியர் லீக் தொடருக்கான உ.பி., அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். இவர், இந்திய அணிக்கு உதவி பயிற்சியாளராக இருந்தார்.

* இந்திய வீராங்கனை வேதா 32, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதுவரை 48 ஒருநாள் (829 ரன்), 76 சர்வதேச 'டி-20'ல் (875) விளையாடி உள்ளார்.

* ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கு (ஆக. 29 - செப். 7, பீஹார்) தயாராக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய ஆண்கள் அணி, 4 நட்பு போட்டியில் (ஆக. 15-21, இடம்: பெர்த்) விளையாடுகிறது.

* இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (செப். 4-14) தொடருக்கு இந்தியாவின் லவ்லினா, நிகாத் ஜரீன், சாக் ஷி, பூஜா ராணி, நீரஜ் போகத், சுமித், சச்சின் சிவாச், ஹிதேஷ் உள்ளிட்ட 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

* பஹ்ரைனில் நடந்த உலக '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, வேல்சின் ரிலே பாவெல் மோதினர். இதில் அத்வானி 4-5 என தோல்வியடைந்து, 29வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.






      Dinamalar
      Follow us