sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஆக 30, 2025 10:19 PM

Google News

ADDED : ஆக 30, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனடா கலக்கல்

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி லீக் போட்டியில் கனடா, வேல்ஸ் அணிகள் மோதின. இதில் கனடா அணி 42-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

காலிறுதியில் இத்தாலி

பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் இத்தாலி அணி 3-0 (25-22, 25-18, 25-11) என ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

செர்பியா அபாரம்

ரிகா: லாட்வியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் போர்ச்சுகல், செர்பியா அணிகள் மோதின. இதில் செர்பிய அணி 80-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஜப்பான் 'சாம்பியன்'

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண்களுக்கான ஆசிய ஜூனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் பைனலில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 20-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* பயிற்சியின் போது தொடையின் பின்பகுதியில் காயமடைந்த இந்திய வீராங்கனை தீபிகா, ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் (செப். 5-14, இடம்: சீனா) இருந்து விலகினார். இவருக்கு மாற்றாக சாக் ஷி தேர்வானார். நேற்று இந்திய அணியினர் சீனா புறப்பட்டுச் சென்றனர்.

* ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. அதிக வெப்பம் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக (இந்திய நேரப்படி இரவு 8:00) 18 போட்டிகள் துவங்கும். எமிரேட்ஸ்-ஓமன் மோதும் ஒரு போட்டி மட்டும் மாலை 5:30க்கு துவங்கும்.

* ஜார்க்கண்ட் தலைநகர் ஜாம்ஷெட்பூரில், செப். 4ல் கிழக்கு மண்டல பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் துவங்குகிறது. இதில் பீஹார், மேற்கு வங்கம், ஒடிசா, உ.பி., உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் என, 6 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us