sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 08, 2025 10:47 PM

Google News

ADDED : அக் 08, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலிறுதியில் ஸ்பெயின்

வால்பரைசோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன் நடக்கிறது. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என, உக்ரைனை வீழ்த்தியது. மெக்சிகோ அணி 4-1 என, சிலியை தோற்கடித்தது.

ஒசாகா அதிர்ச்சி

உஹான்: சீனாவில் நடக்கும் டபிள்யு.டி.ஏ., உஹான் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை தோற்கடித்தார்.

ஆஸி., வீரர் முன்னேற்றம்

ஷாங்காய்: சீனாவில் நடக்கும் ஏ.டி.பி., ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 4வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், போர்ச்சுகலின் நுனோ போர்ஹேஸ் மோதினர். இதில் ஆஸ்திரேலிய வீரர் 7-5, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

பார்சிலோனா கோல் மழை

பார்சிலோனா: ஸ்பெயினில் நடந்த பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் பார்சிலோனா, பேயர்ன் முனிக் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா 7-1 என வெற்றி பெற்றது. ஆர்சனல் அணி 1-2 என, லியானிடம் தோல்வியடைந்தது.

எக்ஸ்டிராஸ்

* நாக்பூரில் நடந்த சீனியர் பெண்கள் 'டி-20' கோப்பைக்கான லீக் போட்டியில் தமிழக அணி (112/4, 20 ஓவர்), 8 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணியிடம் (113/2, 17.3 ஓவர்) வீழ்ந்தது. தமிழகம் சார்பில் கமலினி 32, ஆர்ஷி 29* ரன் எடுத்தனர்.

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணியில் முகமது ஷமி, ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* வான்கடே மைதானத்தில், முன்னாள் இந்திய கேப்டனும், தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்காரின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என, மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

* ஆமதாபாத்தில் நடக்கும் ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப், வாட்டர் போலோ போட்டியில் இந்திய ஆண்கள் அணி 11-35 என, ஜப்பானிடம் தோல்வியடைந்தது. இந்திய பெண்கள் அணி 4-23 என, உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்தது.






      Dinamalar
      Follow us