ADDED : அக் 11, 2025 10:50 PM

ஜோகோவிச் அதிர்ச்சி
ஷாங்காய்: சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-5' செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில், 204வது இடத்தில் உள்ள மொனாகோவின் வாலன்டைன் வச்செராட்டிடம் தோல்வியடைந்தார்.
சபலென்கா தோல்வி
உஹான்: சீனாவில், டபிள்யு.டி.ஏ., உஹான் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா 6-2, 4-6, 6-7 என அமெரிக்காவின் பெகுலாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-3 என, இத்தாலியின் பாவோலினியை வீழ்த்தினார்.
அர்ஜென்டினா அசத்தல்
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, வெனிசுலா மோதின. இதில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அமெரிக்கா, ஈகுவடார் மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
எக்ஸ்டிராஸ்
* டில்லியில் நடந்த தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் (16 வயது) பெண்கள் ஒற்றையர் பைனலில் பார்த்சார்தி 6-0, 3-6, 6-4 என ஸ்ரீநிதி சவுத்ரியை வீழ்த்தி சாம்பியன் ஆனார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் தவிஷ் பஹ்வா 6-2, 6-3 என மனன் அகர்வாலை தோற்கடித்தார்.
* டில்லி பாதி மாரத்தான் ஓட்டம் இன்று நடக்கிறது. இதில் குல்வீர் சிங், அபிஷேக் பால், லில்லி தாஸ், அங்கிதா உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
* ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க சீனா செல்லும் இந்தியா 'ஏ' ஹாக்கி அணியில் வருண் குமார், சஞ்சய் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர்.
* அசாமின் கவுகாத்தியில் நடந்த கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் சீன அணி 2-0 (45-30, 45-44) என, இந்தோனேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
* பின்லாந்தில் நடக்கும் ஆர்டிக் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை அன்மோல் கார்ப் 10-21, 13-21 என ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார்.