sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 22, 2025 10:11 PM

Google News

ADDED : அக் 22, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோகோவிச் விலகல்

பாரிஸ்: பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் (அக். 27 - நவ. 2) நடக்கவுள்ளது. காலில் ஏற்பட்ட காயத்தால் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தொடரில் இருந்து விலகினார். இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் (நவ. 9-16, இத்தாலி) பங்கேற்பார்.

இத்தாலி தகுதி

ரபாட்: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் இத்தாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி, 2வது வெற்றியை பதிவு செய்து, 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றது.

அர்ஜென்டினா அசத்தல்

அசுன்சியன்: பராகுவேயில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தென் அமெரிக்க கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நடக்கிறது. லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 67-57 என, பிரேசிலை வீழ்த்தியது. ஈகுவடார் அணி 60-59 என, பொலிவியாவை தோற்கடித்தது.

பலே பார்சிலோனா

பார்சிலோனா: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் கிரீசின் ஒலிம்பியாகோஸ் அணியை வீழ்த்தியது. ஆர்சனல் அணி 4-0 என, அத்லெடிகோ மாட்ரிட் அணியை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான (2026, பிப். 2-22, இத்தாலி) துவக்க விழாவில், ஜோதியை ஏந்திச் செல்ல, பீஜிங் ஒலிம்பிக் 'தங்க மகன்' இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடருக்கான (அக். 25-26, மஸ்கட், ஓமன்) இந்திய அணியின் கேப்டனாக பிரஷாந்த் சிங், துணை கேப்டனாக தீபக் புனியா நியமிக்கப்பட்டனர்.

* அபுதாபியில், 'டி-10' கிரிக்கெட் 9வது சீசன் (நவ. 18-30) நடக்கவுள்ளது. இதில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், பியுஷ் சாவ்லா, வெஸ்ட் இண்டீசின் போலார்டு, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

* பெண்கள் பிரிமியர் லீக் 4வது சீசனுக்கான (2026) ஏலம், டில்லியில் வரும் நவ. 26-27ல் நடக்கவுள்ளது.

* இளம் இந்திய பெண்கள் கால்பந்து அணி (20 வயது), வரும் அக். 25, 28ல் கஜகஸ்தான் அணியுடன் (19 வயது) நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் பங்கேற்கிறது.






      Dinamalar
      Follow us