sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 26, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 26, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆஸ்திரேலியா கலக்கல்



கோயாங்: தென் கொரியாவில், பெண்கள் அணிகளுக்கான எல்.பி.ஜி.ஏ., சர்வதேச கோல்ப் 5வது சீசன் நடந்தது. இதன் பைனலில் ஆஸ்திரேலிய அணி 2.5 - 0.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஸ்பெயின் 'ஹாட்ரிக்'

சாலே: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில், ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தியது. ஏற்கனவே தென் கொரியா, கொலம்பியாவை தோற்கடித்த ஸ்பெயின், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

பைனலில் அர்ஜென்டினா

அசுன்சியன்: பராகுவேயில் நடக்கும் பெண்களுக்கான (17 வயது) தென் அமெரிக்க கூடைப்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 71-47 என்ற கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் பிரேசில் அணி 52-67 என வெனிசுலாவிடம் தோல்வியடைந்தது.

எக்ஸ்டிராஸ்

* கனடா ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 11-3, 11-3, 11-4 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தின் சிண்டி மெர்லோவை வீழ்த்தினார்.

* ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கும் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடரின் காலிறுதியில் இந்திய அணி 21-7 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

* டில்லியில் நடந்த சர்வதேச போலோ கோப்பையில் இந்திய அணி 10-9 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

* சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான பஞ்சாப் அணியில், இந்திய கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் 28, ஒப்பந்தம் செய்யப்பட்டார். இன்று நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், கேரளா அணிகள் விளையாடுகின்றன.

* இங்கிலாந்தின் லண்டனில் டபிள்யு.டி.டி., ஸ்டார் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா 0-3 (4-11, 8-11, 4-11) என சீனதைபேயின் செங் ஐ-சிங்கிடம் தோல்வியடைந்தார்.

* பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த சர்வதேச கோல்ப் தொடரில் இந்திய வீரர் ககன்ஜீத் புல்லார், 7வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இந்த ஆண்டு விளையாடிய சர்வதேச தொடரில் முதன்முறையாக 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார் ககன்ஜீத்.






      Dinamalar
      Follow us