sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 30, 2025 10:53 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னர் வெற்றி

பாரிஸ்: பிரான்சில் நடக்கும் ஏ.டி.பி., பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்ஸ் மோதினர். இதில் சின்னர் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கனடா கலக்கல்

சாலே: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. 'ரவுண்டு-16' போட்டியில் கனடா அணி 6-0 என, ஜாம்பியாவை வீழ்த்தியது. ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வென்றது.

அமெரிக்கா அசத்தல்

கன்சாஸ் சிட்டி: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. எம்மா சியர்ஸ் 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க, அமெரிக்க அணி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

லிவர்பூல் ஏமாற்றம்

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் லீக் கோப்பை கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 0-3 என, கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வியடைந்தது. ஆர்சனல் அணி 2-0 என, பிரைட்டன் அணியை வீழ்த்தியது.

எக்ஸ்டிராஸ்

* கனடா ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 0-3 (5-11, 8-11, 10-12) என, இங்கிலாந்தின் ஜினா கென்னடியிடம் தோல்வியடைந்தார்.

* பிரிமியர் லீக் 'டி-20' தொடருக்கான கோல்கட்டா அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் 43, நியமிக்கப்பட்டார்.

* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ராஜஸ்தான், கேரளா அணிகள் மோதின. இதில் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

* கோவாவில், ஆசிய அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இத்தொடர் இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.

* சார்ஜாவில், வரும் டிச. 11-14ல் முதன்முறையாக ஏர்பாட்மின்டன் (திறந்த வெளி) உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.






      Dinamalar
      Follow us