ADDED : நவ 05, 2025 11:05 PM

காலிறுதியில் ஜோகோவிச்
ஏதென்ஸ்: கிரீசில், ஏ.டி.பி., ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சிலியின் டாபிலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இங்கிலாந்து ஏமாற்றம்
தோகா: கத்தாரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 0-3 என்ற கணக்கில் வெனிசுலாவிடம் வீழ்ந்தது. தென் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்தது.
லிவர்பூல் முன்னேற்றம்
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பிய கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி (இங்கிலாந்து) 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியை வீழ்த்தியது. லிவர்பூல் அணி 3வது வெற்றியை பதிவு செய்து, 6வது இடத்துக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* பெங்களூருவில் இன்று துவங்கும் 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்றது.
* வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து (2027) தகுதிச் சுற்றில் (நவ. 18, தாகா) பங்கேற்கும் இந்திய உத்தேச அணியில் சுனில் செத்ரி இடம் பெறவில்லை. சமீபத்தில் சிங்கப்பூரிடம் தோல்வியடைந்த இந்தியா, பிரதான சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்தது.
* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் கோகுலம் கேரளா அணி 3-0 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியை வீழ்த்தியது.
* டில்லியில் நடந்த தமிழகம் (385, 278/4 'டிக்ளேர்'), டில்லி (252, 283/7) அணிகள் மோதிய சி.கே. நாயுடு டிராபி (23 வயது) தொடருக்கான 3வது சுற்று போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் தமிழகம் 10, டில்லி 6 புள்ளி பெற்றன.
* தோகாவில் நடக்கும் உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பராஸ் குப்தா, ஹரியா தோல்வியடைந்தனர்.

