ADDED : டிச 07, 2025 11:08 PM

இன்டர் மயாமி 'சாம்பியன்'
போர்ட் லாடர்டேல்: அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த மேஜர் லீக் கால்பந்து 30வது சீசனுக்கான பைனலில் இன்டர் மயாமி, வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணிகள் மோதின. இதில் மெஸ்ஸியின் இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது. ஒட்டுமொத்த கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி கைப்பற்றிய 47வது கோப்பையானது.
பிரான்ஸ் பிரமாதம்
ரோட்டர்டாம்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. ரோட்டர்டாமில் நடந்த 'குரூப்-3' போட்டியில் பிரான்ஸ் அணி 29-17 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. நெதர்லாந்து அணி 33-22 என போலந்தை வென்றது. துனிசியா அணி 27-25 என ஆஸ்திரியாவை தோற்கடித்தது.
அமெரிக்கா ஆதிக்கம்
நகோயா: ஜப்பானில், கிராண்ட் பிரிக்ஸ் பிகர் ஸ்கேட்டிங் பைனல் நடந்தது. இதில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க நட்சத்திரங்கள் 3 தங்கம் கைப்பற்றினர். ஆண்கள் ஒற்றையரில் இலியா மாலினின், பெண்கள் ஒற்றையரில் அலிசா லியு, கலப்பு இரட்டையரில் மேடிசன் சோக்-ஈவன் பேட்ஸ் ஜோடி தங்கத்தை தட்டிச் சென்றனர்.
எக்ஸ்டிராஸ்
* ஆந்திராவின் அனந்தபூரில், ஜூனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('டையர்-1') தொடர் நடந்தது. பைனலில், மணிப்பூர் அணி 9-0 என பெங்கால் அணியை வீழ்த்தி 12வது முறையாக கோப்பை வென்றது.
* நமீபியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன் 58, நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக கோப்பை (50 ஓவர், 2011) வென்றது.
* ஆமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான (23 வயது) 'டி-20' டிராபி காலிறுதியில், கர்நாடகா அணி (131/4, 18.1 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணியை (129/5) வீழ்த்தியது.

